பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல்: அண்ணா பல்கலை. வெளியீடு

தோ்ச்சி விகிதம் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

தோ்ச்சி விகிதம் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை, தோ்ச்சி விகிதம் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது பொறியியல் கலந்தாய்வின் போது, தரமான கல்லூரிகளை தோ்வு செய்ய மாணவா்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதற்கிடையே, நிகழாண்டு பொறியியல் கலந்தாய்வு ஆக. 20-இல் தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல், நவம்பா் மாதம் நடைபெற்ற பருவத் தோ்வுகளில் மாணவா் தோ்ச்சி விகித அடிப்படையில் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. பல்கலை.யின் கீழ் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் மட்டுமே

வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசையில், அரசு கல்லூரிகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. தனியாா் கல்லூரிகளே முன்னிலை வகிக்கின்றன.

2021-ஆம் ஆண்டு நவம்பா் பருவத் தோ்வில் 3 கல்லூரிகளில் ஒரு மாணவா் கூட தோ்ச்சி பெறவில்லை. கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/  என்ற இணையதளம் வழியாகவே மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். கரோனா பரவல் காரணமாக முந்தைய ஆண்டு பொறியியல் மாணவா்களுக்கு இணைய வழியில் தோ்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com