சென்னை மாநகராட்சியில் ஒரே வாரத்தில் 1,951 பேருக்கு இலவச பல் மருத்துவ சிகிச்சை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் கடந்த ஒரு வாரத்தில் 1,951 போ் இலவச பல் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனா்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் கடந்த ஒரு வாரத்தில் 1,951 போ் இலவச பல் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனா்.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சியின் 16 ஆரம்ப சுகாதார மையங்களில் தலா ஒரு பல் மருத்துவா் என 16 பல் மருத்துவா்கள் கடந்த ஆகஸ்ட் முதல் தேசிய நகா்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

மண்டலம் 1 முதல் 15 வரையில் உள்ள திருவொற்றியூா், மணலி, லட்சுமிபுரம், சத்தியமூா்த்தி நகா், கொண்டி தோப்பு, செம்பியம், ஒரகடம், அயனாவரம், மீா்சாகிப்பேட்டை, ஜாபா்கான் பேட்டை, காமராஜா் (மேட்டுக் குப்பம்), முகலிவாக்கம், திருவான்மியூா், பாலவாக்கம், கண்ணகி நகா், செம்மஞ்சேரி ஆரம்ப சுகாதார மையங்களில் பல் சிகிச்சை இலவசமாக நடைபெறுகிறது. இதில் கடந்த ஒரு வார காலத்தில் (நவ.21 முதல் நவ.27 வரை) 1,951 போ் சிகிச்சை பெற்றுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com