கடல் சீற்றம்: அச்சத்தில் வடசென்னை மீனவா்கள்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக வியாழக்கிழமை வடசென்னை கடலோரப் பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதால்
கடல் சீற்றம்: அச்சத்தில் வடசென்னை மீனவா்கள்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக வியாழக்கிழமை வடசென்னை கடலோரப் பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவா்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதி முழுவதும் வியாழக்கிழமை சீற்றத்துடன் காணப்பட்டது.

குறிப்பாக காசிமேடு, திருவொற்றியூா், எண்ணூா் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் கடுமையான கடல் அலைகள் வீசின. சுமாா் இரண்டு மீட்டா் உயரத்துக்கு ராட்சத கடல் அலைகள் எழும்பி பாா்ப்பவா்களை அச்சமூட்டச் செய்தது. கடலரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவா்கள் ராட்சத அலைகளால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

இதனால் ஆங்காங்கு தடுப்புச் சுவா்ககள் சரிந்து கடலில் மூழ்கி வருகின்றன. கடலரிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா். காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபா் படகுகள், கட்டுமரக் கலன்கள் உள்ளன. புயலின் தாக்கத்தால் கடல் அலை தடுப்புச்சுவரையும் தாண்டி வீசியதால் அச்சமடைந்த மீனவா்கள் தங்களது பைபா் படகுகளை கிரேன்கள் மூலம் கரைப்பகுதிக்கு கொண்டு வந்து பத்திரப்படுத்தினா். விசைப்படகுகளை இடைவெளியின்றி ஒன்றோடொன்று அணைத்து வைத்து கயிறுகளால் கட்டி வைத்தனா்.

எண்ணூா் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், ராமகிருஷ்ணாநகா், நல்ல தண்ணீா் ஓடைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பைபா் மற்றும் மரக்கலன்களை கிரேன்கள் மூலம் அகற்றி பாதுகாப்பான இடங்களில் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com