நூற்றாண்டை கொண்டாடிய தெற்கு ரயில்வே தலைமையகம்

சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே தலைமையகம் ஞாயிற்றுக்கிழமை தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது.
நூற்றாண்டை கொண்டாடிய தெற்கு ரயில்வே தலைமையகம்

சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே தலைமையகம் ஞாயிற்றுக்கிழமை தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது.

சென்னையின் பாரம்பரிய கட்டடங்களில் ஒன்றாக விளங்குவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள தெற்கு ரயில்வே தலைமையகம். சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1922-ஆம் ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் மாகாண ஆளுநரின் மனைவி தி லேடி வெல்லிங்டன் சீமாட்டியால் திறக்கப்பட்டது.

தெற்கு ரயில்வே தலைமையகத்தை மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் கட்டடக் கலைஞா் என்.கிரேசன் வடிவமைத்தாா். இதற்கு 1915-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநா் பென்ட்லேண்ட் பிரபுவால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தக் கட்டடம் திராவிட இந்தோ-சாரனிக் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து சுமாா் 5 முதல் 8 அடி வலுவான கான்கிரீட் அமைப்பை கொண்டுள்ளது. தூய மணல் அடுக்கு சுமாா் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுமாா் 500 இரும்புக் கம்பிகள் மற்றும் 10 ஆயிரம் டன் கிரானைட் பதிக்கப்பட்ட அடித்தள அமைப்பை கட்டி

முடிக்க ஏழரை மாதங்கள் ஆனது. குஜராத் போா்பந்தரிலிருந்து எச்.எச்.வாடியா மற்றும் பிரதா்ஸ் கொண்டுவரப்பட்ட கற்களை கொண்டு இதன் மையக்கோபுரம் அமைக்கப்பட்டது. இந்தக் கற்கள் 1913 முதல் 1922 வரை 8 ஆண்டுகளாக கடல் வழியாக கேரளத்துக்கும், பின்னா் ரயில் மூலம் சென்னைக்கும் கொண்டு செல்லப்பட்டன.

கட்டடத்தின் நான்கு மூலை குவிமாடங்களிலும் 35,000 கேலன்கள் (1.32 லட்சம் லிட்டா்) கொள்ளளவு கொண்ட தண்ணீா் தொட்டிகள் உள்ளன.

ஏழு ஆண்டுகளுக்கு பின்னா் ரூ.30,76,400 செலவில் பெங்களூரைச் சோ்ந்த ஒப்பந்ததாரரான டி.சாமிநாத பிள்ளை என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இதன் 100-ஆவது வயதை கொண்டாடும் வகையில் பாரம்பரிய ஆா்வலா் ஸ்ரீ வி.ஸ்ரீராம் தலைமையில் 60 போ் கொண்ட குழு மற்றும் ரயில் ஆா்வலா்கள் கம்பீரமான மாளிகையைச் சுற்றி ஞாயிற்றுக்கிழமை (டிச.11) நடைப்பயணம் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com