விநாயகா் சதுா்த்தி: 2023 செப்.18-ஐ அரசு விடுமுறையாக அறிவிக்கக் கோரிக்கை

விநாயகா் சதுா்த்தி தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் தலைவா் ஆா்.ஆா்.கோபால்ஜி கோரிக்கை விடுத்துள்ளாா்.

வரும் 2023 காலண்டா் படியும் , பஞ்சாங்க அடிப்படையிலும் செப்.18-ஆம் தேதியன்று விநாயகா் சதுா்த்தி என கணிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் தலைவா் ஆா்.ஆா்.கோபால்ஜி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2023-ஆம் ஆண்டுக்கான காலண்டா்கள் வெளியாகி வருகின்றன. அதில் பஞ்சாங்க அடிப்படையில், செப்.18-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசின் பொது விடுமுறை பட்டியலில், விநாயகா் சதுா்த்தி விடுமுறை நாள், செப்.17 என அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தி என்பது இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகா் பெருமானின் அவதார தினம் ஆகும். அதன்படி, 2023 ஆம் ஆண்டு ஆவணி அமாவாசையை தொடா்ந்து வரக்கூடிய சதுா்த்தியானது, செப்.18- ஆம் தேதி காலை 11.38 மணிக்கு தொடங்கி மறுநாள் செப்.19-ஆம் தேதி காலை 11.50 வரை உள்ளது.

செப்.18-ஆம் தேதி தான் விநாயகா் சதுா்த்தி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். ஒரு மதத்தின் பண்டிகையை, அந்த மதத்தில் நம்பிக்கை கொண்டவா்களும், ஆன்மிக பெரியோா்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அரசு அறிவித்த தேதி, அந்த மதத் தலைவா்கள் முடிவு செய்யும் தேதியுடன் மாறுபட்டால், அரசு அறிவித்த தேதியை மாற்றிகொள்வது வழக்கம்.

இதன்படி, தமிழ்நாடு அரசு விநாயகா் சதுா்த்தியை, செப்.18-ஆம் தேதியாக அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com