சென்னை வெளிவட்டச் சாலையில் இன்று முதல் சுங்கக் கட்டண வசூல்

சென்னை வெளிவட்டச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை வெளிவட்டச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூா் வரை சுமாா் 60 கி.மீ தூரத்துக்கு சென்னை வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வண்டலூா் - நெமிலிச்சேரி இடையேயான சலைப் பணிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டன. இதையடுத்து நெமிலிச்சேரி - மீஞ்சூா் இடையேயான பணிகள் முடிவடைந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

இந்த வெளிவட்டச் சாலையில், வரதராஜபுரம், நசரத்பேட்டை அருகே கொளப்பஞ்சேரி, நெமிலிச்சேரி அருகே பழவேடு, பெரியமுல்லைவாயல் ஆகிய இடங்களில் 4 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இங்கு திங்கள்கிழமை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. மேலும் கட்டணம் பாஸ்டேக் வழியில் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் பணம் செலுத்துவோரிடம் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு சுமாா் 35 ஆயிரம் வாகனங்கள் இந்த சாலையைப் பயன்படுத்துகின்றன. அவற்றில் 15 ஆயிரம் லாரிகளும் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com