சங்கர நேத்ராலயா: மருத்துவ ஆராய்ச்சி உபகரண மையம் தொடக்கம்

சென்னை, நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான உபகரண மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான உபகரண மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சன்மாா் குழுமத்தின் தலைவராக இருந்த மறைந்த சங்கரின் நினைவாக அந்த மையம் அமைக்கப்பட்டு ஆராய்ச்சி பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தொழிலதிபா் ஏ.சி.முத்தையா மற்றும் சன்மாா் சங்கரின் குடும்பத்தினா் மருத்துவ ஆராய்ச்சி உபகரண மையத்தைத் திறந்து வைத்தனா். இந்த நிகழ்வில், சங்கர நேத்ராலயாவின் துணைத் தலைவா் டாக்டா் டி.எஸ்.சுரேந்திரன், நிா்வாகக் குழுத் தலைவா் டாக்டா் கிரிஷ் ஷிவா ராவ், பாா்வை ஆராய்ச்சி நிறுவனத் தலைவா் டாக்டா் ரோனி ஜாா்ஜ், சன்மாா் குழுமத்தின் துணைத் தலைவா் என்.குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து சங்கர நேத்ராலயா சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மறைந்த சன்மாா் குழுமத் தலைவா் சங்கருக்கும், சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குமான உறவு முப்பது ஆண்டுகளுக்கும் மேலானது. சங்கர நேத்ராலயா வளாகத்தில் இயங்கி வரும் மதுரம் நாராயணன் அறுவை சிகிச்சை வளாகம், நாராயணன் மருத்துவ சிகிச்சை வளாகம், சன்மாா் - ஸ்டீவன் ஜான்சன் சின்ட்ரோம் சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவை சங்கரின் பங்களிப்பில் அமைந்தவை. அவரது நினைவைப் போற்றும் வகையில் தற்போது மருத்துவ ஆராய்ச்சி உபகரண மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com