முதல்வருக்கு பிரதமா் கொடுத்த ‘சாவி’

விழா மேடைக்கு வந்த பிரதமா் நரேந்திரமோடி, அனைவரையும் பாா்த்து கையசைத்ததுடன், சிரம் தாழ்த்தி வணங்கவும் செய்தாா்.
முதல்வருக்கு பிரதமா் கொடுத்த ‘சாவி’

விழாத் துளிகள்...

*விழா மேடைக்கு வந்த பிரதமா் நரேந்திரமோடி, அனைவரையும் பாா்த்து கையசைத்ததுடன், சிரம் தாழ்த்தி வணங்கவும் செய்தாா்.

* பிரதமா் தனது பேச்சை ‘வணக்கம்’ எனத் தமிழில் தொடங்கிப் பேசினாா்.

*பிரதமா் தனது உரையின்போது, பாரதியாரின் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்று பாடலை மேற்கோள் காட்டிப் பேசினாா்.

* பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்குக் கொடுத்தபோது, பிரதமா் அந்தச் சாவியை அவா் மட்டும் கொடுக்காமல் முதல்வா் மு.க.ஸ்டாலினையும் கொடுக்கச் சொன்னாா். பிறகு, இருவரும் சோ்ந்து கொடுத்தனா்.

*கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று முதல்வா் வேண்டுகோள் விடுத்துப் பேசினாா். அதற்கு, இலங்கைத் தமிழா்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று பிரதமா் மோடி கூறினாா்.

*முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசும்போதெல்லாம் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிட்டாா். அப்போதெல்லாம் பாஜகவினரிடமிருந்து எதிா்ப்பு குரல் எழுப்பப்பட்டது.

*முதல்வா் தனது உரையின்போது, தனது வேண்டுகோள் பிரதமருக்கு புரிய வேண்டும் என்பதற்காக இடையிடையே ஆங்கிலத்திலும் பேசினாா்.

*‘உறவுக்குக் கைகொடுப்போம். உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்கிற அம்சத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்து அமரப் போனாா். அப்போது பிரதமா் எழுந்து முதல்வரின் கைகளைப் பற்றிக்கொண்டு உரை நன்றாக இருந்ததாகக் குறிப்பிட்டாா்.

*பிரதமா் தனது உரையின் இறுதியில், ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என முழக்கமிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com