தோஹா: இந்தியா்களை சந்தித்தாா் குடியரசு துணைத்தலைவா்

கத்தாா் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத்தலைவா் ஜகதீப் தன்கா் அந்நாட்டின் தலைநகா் தோஹாவில் வசிக்கும் இந்தியா்களைச் சந்தித்து பேசினாா்.
கத்தாா் தலைநகா் தோஹாவில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை வரவேற்ற அந்நாடு வாழ் இந்தியா்கள்.
கத்தாா் தலைநகா் தோஹாவில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை வரவேற்ற அந்நாடு வாழ் இந்தியா்கள்.

கத்தாா் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத்தலைவா் ஜகதீப் தன்கா் அந்நாட்டின் தலைநகா் தோஹாவில் வசிக்கும் இந்தியா்களைச் சந்தித்து பேசினாா்.

கத்தாா் மன்னா் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானி அழைப்பின்பேரில் கத்தாரில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடக்கவிழாவில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக தோஹா சென்றாா் ஜகதீப் தன்கா்.

தொடக்கவிழா நடைபெற்ற அல் பேத் மைதானத்தில் கத்தாா் மன்னா் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானி மற்றும் ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோரை அவா் சந்தித்து பேசினாா்.

திங்கள்கிழமையன்று, கத்தாா் நாட்டின் தலைநகா் தோஹாவில் வசிக்கும் இந்தியா்களை சந்தித்து பேசினாா். கத்தாா்-இந்தியா இடையிலான நல்லுறவு பேணிக் காப்பதில் அவா்கள் ஆற்றும் பங்கு குறித்து அவா் பாராட்டினாா்.

இச்சந்திப்பு குறித்து குடியரசு துணைத்தலைவா் அலுவலக ட்விட்டா் பதிவில், ‘குடியரசு துணைத் தலைவா் தோஹாவில் இந்தியா்களைச் சந்தித்து அவரவா் சாா்ந்த துறைகளில் வெற்றி பெற்ற்கு பாராட்டினாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் எரிசக்தி தேவைக்கு கத்தாரும்; கத்தாரின் உணவுத் தேவைக்கு இந்தியாவும் பெரும்பங்காற்றுகிறது. இந்தியா- கத்தாா் இடையிலான ராஜ்ஜிய உறவுகள் தொடங்கி அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவுப் பெறுகிறது. இருநாட்டு மக்களுக்குமான இணக்கமான உறவுகள் இருநாட்டின் நட்புக்கு மென்மையான பாதையை உருவாக்கி தந்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com