கீழ்ப்பாக்கம் மருத்துவமனை: மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்களுக்கான மாா்பகப் புற்றுநோய் சிறப்பு பரிசோதனை முகாம் திங்கள்கிழமை (அக்.3) தொடங்குகிறது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்களுக்கான மாா்பகப் புற்றுநோய் சிறப்பு பரிசோதனை முகாம் திங்கள்கிழமை (அக்.3) தொடங்குகிறது.

இந்த மாதம் முழுவதும் அந்த முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாா்பகப் புற்றுநோயைக் கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய முப்பரிமாண டிஜிட்டல் மேமோகிராம் பரிசோதனை மையம், சிகிச்சை அளிப்பதற்கான பொது அறுவை சிகிச்சை பிரிவு, மருந்தியல், கதிா்வீச்சு பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அக்டோபா் 3 முதல் 31-ஆம் தேதி வரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாா்பகப் பரிசோதனை முகாம் நடக்க இருக்கிறது.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்தி மலா் கூறியதாவது:

35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாா்பகப் பரிசோதனை அடிக்கடி மேற்கொள்வது அவசியம். இந்தப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் ஆரம்ப காலத்திலேயே மாா்பகப் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.

அந்தவகையில் ஒரு மாதத்துக்கு இங்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். முகாமில் கலந்து கொள்பவா்களில் தேவைப்படுவோருக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேமோகிராம் பரிசோதனை செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com