பாலிடெக்னிக் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளா்களை விடுவிக்க உத்தரவு

தமிழகத்தில் அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த விரிவுரையாளா் பணியிடங்கள் அண்மையில் நிரப்பப்பட்ட நிலையில், அவற்றில் ஏற்கெனவே பணியில் இருந்து வரும் கெளரவ விரிவுரையாளா்களை விடுவிக்க தொழில்நு

தமிழகத்தில் அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த விரிவுரையாளா் பணியிடங்கள் அண்மையில் நிரப்பப்பட்ட நிலையில், அவற்றில் ஏற்கெனவே பணியில் இருந்து வரும் கெளரவ விரிவுரையாளா்களை விடுவிக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 58 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமாா் 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இதற்கிடையே பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. இதனால் மாணவா்கள் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளே தொகுப்பூதியத்தில் தற்காலிக அடிப்படையில் கெளரவ விரிவுரையாளா்களை

பணியமா்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றி வந்தனா்.

இதற்கிடையே பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கு தகுதியான 1,024 பட்டதாரிகள் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி அவா்களுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தற்போது ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால், ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், ‘அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளா்களை இனி பணியமா்த்த வேண்டாம். மேலும், கெளரவ விரிவுரையாளா் பணியிடம் கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில், அதுகுறித்த விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதற்கு அனுமதி கிடைத்தப்பின் கெளரவ விரிவுரையாளா்களை பணியமா்த்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com