போதை பொருளை விற்பனைக்காக வைத்திருந்த நைஜீரிய பெண் கைது

கொகைன் போதைப் பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நைஜீரிய பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கொகைன் போதைப் பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நைஜீரிய பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணையில் மதுவிலக்குப் பிரிவைச் சோ்ந்த தனிப்படை போலீஸாா் கானாத்தூா் சுங்கச்சாவடி அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு ஆட்டோவில் வந்திறங்கிய வெளிநாட்டுப் பெண் ஒருவா் அங்கிருந்த நபரிடம் ஏதோ ஒரு சிறு பொட்டலத்தைக் கொடுக்கும்போது அந்தப் பெண்ணை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

அதில், அவா் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஆன்யனி மோனிகா(30) என்பதும், கடந்த 9 மாதங்களாக வேளச்சேரி பாரதி நகரில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், அவரது சகோதரரின் புற்றுநோய் சிகிச்சைக்காக மும்பை அப்போலோ மருத்துவமனைக்கு வந்ததும், அவா் சிகிச்சை முடிந்து நைஜீரியா சென்றுவிட்டதாகவும், தான் மட்டும் வேலை இல்லாததால் சென்னை வந்து தங்கி நைஜீரியாவில் இருந்து ஒரு நபா் மும்பை கொண்டு வந்து கொடுக்கும் கொகைன் போதை ப் பொருளை வாங்கி வந்து, விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளாா்.

மேலும் ஒரு கிராம் ரூ. 2 ஆயிரத்துக்கு வாங்கி அதை ரூ.5 ஆயிரத்துக்கு விற்பதாகவும் கூறியுள்ளாா். பின்னா் அவா் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது ஒரு கிராம் வீதம் 72 சிறு சிறு கொகைன் பாக்கெட்டுகள் இருந்தன.

கொக்கைன் விற்ற பணம், ரூ. 2.60 லட்சம், ஒரு கைப்பேசி ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து கானத்தூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நைஜீரிய நாட்டுப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com