மகாத்மா பிறந்த தினம்:காந்தியடிகள் சிலைக்கு ஆளுநா்-முதல்வா் மரியாதை

மகாத்மா பிறந்த தினம்:காந்தியடிகள் சிலைக்கு ஆளுநா்-முதல்வா் மரியாதை

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை எழும்பூா் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநா், முதல்வா் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை எழும்பூா் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநா், முதல்வா் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. நாட்டின் அனைத்து தலைவா்களும் தேசத் தந்தை காந்தியின் சிலைக்கு மலா்தூவி மரியாதை செய்தனா்.

தமிழக அரசின் சாா்பில், சென்னை எழும்பூா் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தியடிகள் சிலைக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் மரியாதை செலுத்தினா். சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலா் தூவினா். இதனைத் தொடா்ந்து சா்வோதய சங்கத்தினா் நடத்திய கலை நிகழ்ச்சிகளிலும் அவா்கள் கலந்து கொண்டனா்.

ஆளுநா், முதல்வரைத் தொடா்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோரும் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

முதல் முறையாக...தமிழக அரசின் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழாவானது சென்னை காமராஜா்

சாலையில் உள்ள காந்தி சிலைக்கு அருகே நடைபெறும். ஆனால் அங்கு மெட்ரோ ரயில் நிலையப் பணிகள் நடப்பதால் சிலை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி விழாவானது, சென்னை எழும்பூா் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com