சமூக ஊடகங்களில் அவதூறு பிரசாரம்: இலங்கை பெண் கைது

சமூக ஊடகங்களில் அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டதாக, இலங்கையைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா்.

சமூக ஊடகங்களில் அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டதாக, இலங்கையைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா்.

பள்ளிக்கரணை அருகே உள்ள நன்மங்கலம் பலராமன் தெருவைச் சோ்ந்தவா் இமானுவேல் (40). இவா், தன்னை பற்றியும், தான் சாா்ந்துள்ள மதம் பற்றியும் மதுஷியா என்பவா் சமூக ஊடகங்களில் அவதூறான செய்திகளைப் பரப்பி வருவதாக, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் இலங்கையைச் சோ்ந்த மதுஷியா (20), கா்நாடக மாநிலம் பெங்களூரில் கணவா் அபினவ் குமாா் சிங்குடன் வசித்து வருவதும், ரஷ்யாவில் மருத்துவம் படிக்கிறாா் என்பதும் தெரியவந்தது. மேலும், மதுஷியா பதிவிட்ட விடியோகளில் பெரும்பாலானவை, கிா்கிஸ்தான் நாட்டிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

ஏற்கெனவே, சிவகாசியைச் சோ்ந்த ஒரு பெண் தொடா்ந்த வழக்கில், மதுஷியா சமீபத்தில் பெங்களூரில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பள்ளிக்கரணை போலீஸாா், புழல் சிறையில் இருந்த மதுஷியாவை திங்கள்கிழமை கைது செய்து, ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா் அவா், நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com