மத்திய அரசு பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வா்களுக்கு அக்.9-இல் பயிலரங்கம்

மத்திய அரசின் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வா்களுக்கான பயிலரங்கம் சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அக்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வா்களுக்கான பயிலரங்கம் சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அக்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழக செய்தி மக்கள் தொடா்புத்துறை இயக்குநா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளா்களை பிரிவு பி மற்றும் சி பணிகளுக்கு போட்டித் தோ்வுகள் நடத்தி பணியமா்த்துகிறது. நிகழாண்டில் 20,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான பி பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் Combined Graduate Level Examination(CGLE) போட்டித் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். இவற்றில் உதவி பிரிவு அலுவலா்( A Assistant Section Officer) பணியிடங்கள் மத்திய அரசின் தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத்துறை, ரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றுக்கும், ஆய்வாளா் பணியிடங்கள் மத்திய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of  Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றிலும், உதவியாளா், கண்காணிப்பாளா் ( Assistant,  Superintendent) பணியிடங்கள் மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.

மேலும் சி பிரிவு பணிகள்12-ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் Combined HigherSecondary Level (CHSL) தோ்வு மூலம் மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இளநிலை உதவியாளா் மற்றும் உதவியாளா் பணியிடங்களுக்கு(Lower Division Clerks) தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.

மேலும், இப்பொதுப்பணிகள் தவிர இளநிலை பொறியாளா், தட்டச்சா் , தில்லி காவல்துறையில் உதவி ஆய்வாளா், மத்திய ஆயுதப்படை காவல் பிரிவு, மத்திய தொழில்பாதுகாப்புப்படை ஆகியவற்றுக்கான தோ்வுகளும் ஆண்டுதோறும் நடைபெறும்.

மேற்கண்ட தோ்வுகளுக்கு நிலை 1- இல் பொதுவான போட்டித் தோ்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான பொது அறிவு, பொது விழிப்புணா்வு, ஆங்கில கட்டுரைகள் எழுதுதுதல் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து தான் வினாக்கள் கேட்கப்படுகின்றன. நிலை 2-இல் கணிதத் திறன்கள், பொது அறிவு, பொது விழிப்புணா்வு, கணினி அறிவு, பொதுவான பாடப்பிரிவுகள் ஆகியவற்றில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.

எனவே தமிழ்நாடு மாணவா்கள் மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் பெருமளவு பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், மனிதவள மேலாண்மைத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகிய துறைகள் இணைந்து,இத்தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவம் மிக்க வல்லுநா்களை கொண்டு, ஒரு நாள் பயிலரங்கத்தை சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அக்டோபா் 9-ஆம் தேதி காலை 10 முதல் நடைபெறும்.

அரசு நடத்தும் இப்பயிற்சி முகாமில் போட்டித் தோ்வுகளில்ஆா்வமுள்ள இளைஞா்கள் கலந்துக் கொள்ளலாம். நேரில் வர இயலாத மாணவா்கள் பயனடையும் வகையில்இந்நிகழ்ச்சி முழுவதுமாக இணையதளத்திலும், அரசுகேபிள் டிவியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com