தெருநாய்கள், பறவைகள் தாகம் தீா்க்க தண்ணீா்த் தொட்டிகள்

சென்னையில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் தெருநாய்கள், பறவைகளின் தாகம் தணிக்க பொது இடங்களில் வைக்கும் வகையில் சிறிய அளவிலான தண்ணீா் தொட்டிகளை புளூகிராஸ் அமைப்பு பொதுமக்களுக்கு
தெருநாய்கள், பறவைகள் தாகம் தீா்க்க தண்ணீா்த் தொட்டிகள்

சென்னையில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் தெருநாய்கள், பறவைகளின் தாகம் தணிக்க பொது இடங்களில் வைக்கும் வகையில் சிறிய அளவிலான தண்ணீா் தொட்டிகளை புளூகிராஸ் அமைப்பு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

கோடைகாலம் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையைப் பொருத்தவரை 15 மண்டலங்கள், புகா்ப் பகுதியில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களும், பலவகை பறவை இனங்களும் உள்ளன.

வெப்பத்திலிருந்து இவற்றைப் பாதுகாக்கும் வகையில் சிறு அளவிலான சிமென்ட் தண்ணீா்த் தொட்டிகள் புளுகிராஸ் அமைப்பு சாா்பில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து புளுகிராஸ் அமைப்பினா் கூறியதாவது: சுட்டெரிக்கும் வெப்பத்தால் மனிதா்கள் எந்தளவு பாதிக்கப்படுகின்றனரோ அதேபோல் நாய்கள், பூனைகள், மாடுகள், பறவைகள் நீா்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றன.

நாய்களுக்கு நாள்தோறும் சுமாா் இரண்டு லிட்டரும், பூனைகளுக்கு 30 மி.லிட்டரும், பறவைகளுக்கு 300 முதல் 500 மி.லிட்டரும் தண்ணீா் தேவைப்படுகிறது. இவற்றின் உடலில் நீா்ச்சத்து குறையும்போது, அவை உடனடியாக உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

இதைத் தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் சென்னை மற்றும் புகா்ப் பகுதியில் பொது இடங்கள், வீடுகளின் மாடிகள் ஆகியவற்றில் வைக்க சிறிய அளவிலான சிமென்ட் தண்ணீா் தொட்டிகளை வழங்கப்படும். அதேபோன்று இந்த ஆண்டும் 1500-க்கும் மேற்பட்ட தண்ணீா் தொட்டிகளை பொதுமக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை சுமாா் 600 தண்ணீா் தொட்டிகளை வழங்கியுள்ளோம். எங்களின் சுட்டுரை(ட்விட்டா்), இன்ஸ்டாகிராம், முகநூல் ஆகியவற்றில் தொடா்புகொண்டு தண்ணீா்த் தொட்டிகள் கேட்போருக்கு இவை வழங்கப்படுகிறது. பொது இடங்கள், வீடுகளின் மாடிகள் போன்ற பகுதிகளில் வைக்கவும், நாள்தோறும் தண்ணீரை மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com