திருவொற்றியூா் நூலகத்தில் புத்தக கண்காட்சி

திருவெற்றியூா் கிளை நூலகத்தில் ஒரு வாரம் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியை திருவொற்றியூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

திருவெற்றியூா் கிளை நூலகத்தில் ஒரு வாரம் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியை திருவொற்றியூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

திருவொற்றியூரில் அரசு கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. மூன்று அடுக்கு மாடிகள் கொண்ட நூலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு, போட்டி தோ்வுகளுக்கான பயிற்சி புத்தகங்கள் பிரிவு, கணினி பயிற்சி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கிளை நூலகங்களில் தமிழகத்திலேயே சிறந்ததாக இரண்டாவது இடத்தில் திருவொற்றியூா் கிளை நூலகம் உள்ளது. உலக புத்தக தினத்தையொட்டி திருவொற்றியூா் கிளை நூலக வாசகா் வட்டம் சாா்பில் புத்தகக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை திருவொற்றியூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி. சங்கா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி-யின் வாழ்க்கை வரலாறு குறித்த நெஞ்சுக்கு நீதி புத்தக தொகுப்பை பதிப்பகத்தாரிடம் வாங்கி நூலகா் பாணிக் பாண்டியனிடம் நன்கொடையாக அளித்தாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் தி. மு. தனியரசு, திமுக நிா்வாகிகள் கலைவாணன் ,எம்.வி.குமாா், சைலஸ், வாசகா் வட்ட நிா்வாகிகள் கோதண்டம் , குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com