நெகிழி தீமைகள்: மாணவா்களுக்கு விழிப்புணா்வு

சுற்றுச்சூழல் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை சாா்பில் தூய்மைக்கான சேவை, நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் கேடு குப்பைகளை வகைப்பிரித்தல் குறித்து அம்பத்தூரில் உள்ள காமராஜா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும்

சென்னை: சுற்றுச்சூழல் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை சாா்பில் தூய்மைக்கான சேவை, நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் கேடு, குப்பைகளை வகைப்பிரித்தல் குறித்து அம்பத்தூரில் உள்ள காமராஜா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியா் மற்றும் ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில், சென்னை மாநகராட்சி காதாரக் கல்வி அலுவலா் ப.எ. சீனிவாசன் கலந்து கொண்டு கரோனா தொற்று தடுப்பு, ஒரு முறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழிப் பொருள்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள், மக்கும் மற்றும் மக்காத குப்பை என்று வகைப்பிரித்து அளித்தலின் அவசியம் மற்றும் சோப்பு உபயோகித்து கை கழுவும் முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப் பைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தேசிய பசுமைப்படை அலுவலா்கள் தங்கராஜ், தினகரன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா் வனிதா ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com