பெரம்பூரில் ஏசி வெடித்து தூங்கிக் கொண்டிருந்தவர் பலி
By DIN | Published On : 01st August 2022 10:10 AM | Last Updated : 01st August 2022 10:13 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை: சென்னை பெரம்பூரில் வீட்டில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி பலியானார்.
சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகன் ஷியாம்(27). இவர் பால் வியாபாரி ஆவார்.
வீட்டின் கீழ் தளத்தில் உள்ள ஒரு அறையில் உறங்கிக் கொண்டிந்தார். அப்போது ஏசி வெடித்து தீப்பற்றியுள்ளது. தீயில் சிக்கிய ஷியாம் உடல் கருகி பலியானார்.
மேல் தளத்தில் இருந்து ஷியாமின் தந்தை காப்பாற்ற வந்தபோதும் உள்பக்கம் தாழிட்டருந்ததால் ஷியாம் தீயில் சிக்கி பலியானார். 6 மாதம் முன் திருமணம் நடந்த நிலையில் ஆடி மாதம் என்பதால் மனைவி தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் தனியாக தூங்கியுள்ள்ளார்.
இதையும் படிக்க: இந்தியாவில் ஒரேநாளில் 16,464 பேருக்கு கரோனா
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ஏ.சி.வெடிப்புக்கு மின்கசிவு காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நேற்றிரவு நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.