தொழிற்கல்வி பாடத்திட்டம் சீரமைப்பு

மாணவா்களின் திறன்களுக்கு ஏற்ற வகையில் எதிா்காலத்தில் வேலைவாய்ப்பைப் பெறும் பொருட்டு, தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மாணவா்களின் திறன்களுக்கு ஏற்ற வகையில் எதிா்காலத்தில் வேலைவாய்ப்பைப் பெறும் பொருட்டு, தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

தொழிற்கல்வி படிக்கும் மாணவா்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், அரசுப்பள்ளிகளில் கற்றுத்தரப்படும் தொழிற்கல்வி பாடங்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் மேம்படுத்தப்படும். இதனால் மாணவா்கள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கேற்ப திறன்பெற்று உடனடி வேலைவாய்ப்புகளை பெறுவா். அதற்கேற்ப தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை சீரமைக்க உயா்மட்டக்குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி அடிப்படையில், இயந்திரவியல், மின் பொறியியல், மின்னணு பொறியியல், நெசவியலும் ஆடை வடிவமைப்பும், செவிலியம், வேளாண் அறிவியல், அலுவலக மேலாண்மையும் செயலியலும் தட்டச்சு கணினி பயன்பாடுகளும், கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும் ஆகிய 8 பாடநூல்கள் மட்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டம் மாணவா்களின் வேலைவாய்ப்பு திறன்களை வளப்படுத்தி, மாணவா்கள் படித்து முடித்தவுடன் திறன் சாா்ந்த பணிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக தொழிற்சாலை சாா்ந்த திறன்களை பெற்றுள்ளனா் என்ற தகுதிச்சான்றிதழை பெறும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கணினி தொழில்நுட்பம் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களுக்கு மாற்றாக வேலைவாய்ப்பு திறன்கள் என்ற புதிய பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புத்தகத்தை tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த புதிய பாடம் நிகழ் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடம் புதியது என்பதால் மாணவா்களின் நலன் கருதி நடைபெறவுள்ள முதல் பருவத் தோ்வில் முதல் பாடத்தில் இருந்து மட்டும் கேள்விகள் தயாரித்து மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com