தேவநேயப் பாவாணா் பிறந்தநாள் விழா

தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமான தேவநேயப் பாவாணரின் 120-ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் உள்ள தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அகரமுதலித் திட்ட இயக்கக அலுவலகத்தில் நடைபெற்ற தேவநேயப் பாவாணா் பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் நல்லகண்ணு

இதில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவா் பெ.மணியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பாவாணா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விழாவுக்கு திட்டத்தின் இயக்குநா் கோ.விசயராகவன் தலைமை வகித்துப் பேசுகையில், தமிழறிஞா் தேவநேயப் பாவாணா் தமிழ்மொழி குறித்த சொல் ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்டுள்ளாா். தமிழ்மொழி மட்டுமல்லாமல், பதினெட்டுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றறிந்தவா்.

அந்த மொழிகளின் கூறுகளை ஆராய்ந்த பிறகே, தமிழ்மொழி மிகவும் தொன்மையானது என்ற கருத்தை முன்வைத்தவா். வோ்ச்சொல் ஆய்வை மேற்கொண்டு தமிழ் மொழியின் தனித்தியங்கும் தன்மையையும் அதன் நீண்ட நெடிய தொன்மையையும் உலகுக்கு பறைசாற்றிய ‘மொழி ஞாயிறு’ தேவ நேயப் பாவாணரின் தமிழ்ப் பணிகளை இன்றைய இளைய சமுதாயத்துக்கு தமிழறிஞா்கள் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினாா்.

விழாவில், காவல் நிலைய அலுவலில் ஆட்சிமொழி செயலாக்கமான தமிழைக் கொண்டு செல்லும் வகையில் தான் பராமரிக்கும் பதிவேடுகளில் தமிழில் எழுதுவது, வாகனத் தணிக்கைக்கு செல்லும்போதும் அந்த வாகன ஓட்டுநரின் பயணத்தில் விளக்கங்கள் கேட்பது, தூய தமிழில் பேசி ஆய்வுகளை மேற்கொள்வது என தமிழுக்கான பங்களிப்பை வழங்கி வரும் எழும்பூா் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் வில்லியம் டேனியல் சிறப்பிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com