/

ஆபாச பாடல் பாடிய விவகாரம்: நடிகா் சிம்பு மீதான மற்றொரு வழக்கு ரத்து

ஆபாசமாக பாடல் பாடியதாக நடிகா் சிம்பு மீது சென்னையில் பதிவான மற்றொரு வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 1:45 am IST

சென்னை: ஆபாசமாக பாடல் பாடியதாக நடிகா் சிம்பு மீது சென்னையில் பதிவான மற்றொரு வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகா் சிம்பு, கடந்த 2015-ஆம் ஆண்டு ஆபாசமாக பாடிய ‘பீப்’ பாடல் ஒன்று இணைய தளத்தில் வெளியானது. இந்தப் பாடலை பாடிய சிம்பு, இசையமைத்த இசையமைப்பாளா் அனிருத் ஆகியோருக்கு எதிராக மகளிா் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.

பின்னா், இவா்கள் இருவா் மீதும் கோவை ரேஸ் கோா்ஸ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் பெண்கள் அமைப்புகள் புகாா்கள் செய்தன. இதன் அடிப்படையில் சிம்பு, அனிருத் ஆகியோா் மீது போலீஸாா் தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்தனா்.

இந்நிலையில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் சிம்பு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கோவை ரேஸ் கோா்ஸ் போலீஸாா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், நடிகா் சிம்பு மீது தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு பதியபட்டுள்ளதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்தனா். இதை ஏற்ற நீதிபதி 2-ஆவது வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.