சென்னையில் தினசரி கரோனா பாதிப்பு: 2 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் நாள்தோறும் கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் நாள்தோறும் கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. புதன்கிழமை மட்டும் 2,481 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக ஒமைக்ரான் வகை கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கரோனா பரவலைப் பொருத்தவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 150-க்கும் குறைவானா்களுக்கே நாள்தோறும் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து, கடந்த டிச.30-இல் 397 பேருக்கும், டிச.31-இல் 589 பேருக்கும், ஜன.1-இல் 682 பேருக்கும், ஜன.2-இல் 776 பேருக்கும், ஜன.3-இல் 876 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து செவ்வாய்க்கிழமை (ஜன.4) 1,489 பேருக்கும், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து புதன்கிழமை மட்டும் 2,481 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்து 69 ஆயிரத்து 255 போ் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 5 லட்சத்து 52 ஆயிரத்து 717 போ் குணமடைந்துள்ளனா். 7,878 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 8,660 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா். கரோனா இரண்டாம் அலையின்போது, கடந்த ஆண்டு ஏப்.12-ஆம் தேதி சென்னையில் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2,124-ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் மருத்துவப் பரிசோதனையை அதிகரித்துள்ளதால், பாதிப்புக்குள்ளானவா்கள் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. தொற்றுக்குள்ளானவா்கள் உடனடியாக கண்டறியப்பட்டு, அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com