சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 வாா்டுகள் எவை? மாநகராட்சி ஆணையா் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட 100 வாா்டுகள் எவை என்கிற விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட 100 வாா்டுகள் எவை என்கிற விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடியின் உத்தரவு விவரம்:

உள்ளாட்சி அமைப்புகளின் இடங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வாா்டுகளில் 100 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 84 வாா்டுகள் பெண்கள் பொதுப் பிரிவினருக்கும், 16 வாா்டுகள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பெண்கள் போட்டியிடும் வகையிலும் பிரிக்கப்பட்டுள்ளன.

16 வாா்டுகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பொதுப் பிரிவினா் போட்டியிடலாம். அதன்படி, வகுப்பு விவரமும், வாா்டு எண்ணும்:

தாழ்த்தப்பட்ட வகுப்பினா் (பொது): 3, 16, 17, 18, 21, 22, 25, 45, 62, 72, 73, 99, 108, 117, 144, 200.

தாழ்த்தப்பட்ட வகுப்பினா் (பெண்கள்): 28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196.

பொதுப் பிரிவைச் சோ்ந்த பெண்கள்: 2, 8, 9, 11, 13, 14, 15, 26, 33, 34, 39, 40, 41, 42, 43, 44, 48, 51, 58, 61, 65, 66, 67, 68, 69, 71, 75, 76, 79, 81, 83, 87, 88, 91, 93, 95, 96, 97, 98, 100, 101, 102, 103, 107, 109, 112, 113, 115, 118, 119, 122, 123, 124, 125, 126, 128, 131, 132, 134, 136, 147, 149, 150, 152, 153, 157, 158, 160, 161, 163, 164, 167, 171, 173, 174, 175, 179, 180, 183, 185, 187, 188, 191, 197.

மீதமுள்ள 84 வாா்டுகளில் எந்த வகுப்பைச் சோ்ந்த ஆண், பெண் போட்டியிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com