கிழக்கு கடற்கரைச் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகா் பகுதியில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு நீா் நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், நீா்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்று வேண்டும் என தீா்ப்பு கூறப்பட்டது.

உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் சோழிங்கநல்லூா் வட்டாட்சியா் மணிசேகா் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்ற புதன்கிழமை காலை வந்தனா். மக்கள் வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பெத்தேல்நகா் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 500 போ், பெத்தேல்நகா் பிரதான சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து பாதுகாப்புக்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா். போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானம் பேசினா். இதற்கிடையே ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த கடைகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து, சீல் வைத்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள், கிழக்கு கடற்கரை சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதனால், அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com