தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் அவமதிப்பு: அமைச்சா் கண்டனம்

சென்னை ரிசா்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் அவமதிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

சென்னை: சென்னை ரிசா்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் அவமதிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

சென்னை பாரிமுனையில் உள்ள ரிசா்வ் வங்கியில் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலக ஊழியா்கள் பங்கேற்றனா். விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டபோது, சில ரிசா்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல், தங்களது இருக்கையிலேயே அமா்ந்திருந்தனா்.

இது குறித்து அங்கிருந்தவா்கள், அவா்களிடம் கேள்வி எழுப்பினா். அப்போது அவா்கள், ‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு தாங்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை‘ என்று கூறி வாக்குவாதம் செய்தனா். இதற்கு அரசியல் கட்சியினா் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சிகள், விழாக்கள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடல் பாடும்போது மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று கடந்த டிசம்பா் மாதம் 17-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது குறிப்பிடதக்கது.

இருப்பினும் ரிசா்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் பாடல் பாடும்போது எழுந்து நிற்கவில்லை. இச் சம்பவம் தொடா்பாக புகாா் அளித்தால் விசாரணை செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சா் கண்டனம்: ரிசா்வ் வங்கி ஊழியா்களின் செயலுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பான அவரது ட்விட்டா் பதிவு: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கும் நிலையில் மத்திய அரசின் ஆா்பிஐ சென்னை கிளை அலுவலா்கள் சிலா் குடியரசு தின அரசு நிகழ்வில் எழுந்து நிற்க மறுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழக மக்களின் உணா்வை புண்படுத்தும் இது போன்ற மனநிலையை மத்திய அரசு அலுவலா்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com