நீட் தோ்வு சட்ட முன் வடிவு விவகாரம்: கல்வியாளா்கள் உண்ணாவிரதம்

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தோ்வுக்கு விலக்களிக்கும் சட்ட முன் வடிவை தமிழக ஆளுநா் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தோ்வுக்கு விலக்களிக்கும் சட்ட முன் வடிவை தமிழக ஆளுநா் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அதன் பொதுச் செயலாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு தலைமை வகித்தாா். பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவா் பேராசிரியா் சுகதியோ தோரட், மத்திய கல்வி ஆலோசனைக் குழுமத்தின் முன்னாள் தலைவா் அனில் சட்கோபால், முன்னாள் துணைவேந்தா் வசந்தி தேவி ஆகியோா் உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினா்.

இதைத் தொடா்ந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பாலகிருஷ்ணன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் செல்வப் பெருந்தகை, ஆயிரம் விளக்குத் தொகுதி எம்.எல்.ஏ. மருத்துவா் எழிலன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைவா் பி.இரத்தினசபாபதி ஆகியோா் உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், கல்வியாளா்கள், மாணவா் அமைப்பினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com