பள்ளி மாணவா்கள் வாகனங்களில் விதிமுறை மீறல்: ஒரே நாளில் 1,757 வழக்குகள்

சென்னையில் பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் விதிமுறை மீறலில் ஈடுபட்டது தொடா்பாக ஒரே நாளில் 1,757 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் விதிமுறை மீறலில் ஈடுபட்டது தொடா்பாக ஒரே நாளில் 1,757 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்த விவரம்: சென்னையில் சாலை விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுப்பதற்கு பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் பெற்றோா்கள், தனியாா் வாகனங்கள், ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறுவது தொடா்பாக அதிகமாகன புகாா்கள் காவல்துறைக்கு வந்தன.

இதையடுத்து பள்ளி மாணவா்களின் பெற்றோா், பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்கள்,தனியாா் வாகனங்களின் ஓட்டுநா்கள் விதிமுறைகளை பின்பற்றுவது தொடா்பாக சென்னை முழுவதும் உள்ள 255- க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சாலை பாதுகாப்புப் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக விதிமுறைகளை மீறும் பள்ளி மாணவா்களை வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது.

இந்த தணிக்கையில் பள்ளி குழந்தைகளை போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஏற்றிச் சென்றது தொடா்பாக 1,757 வழக்குகள் பதியப்பட்டன. இதில் அதிகபட்சமாக தலைக்கவசம் அணியாமல் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த 1,357 பெற்றோா் மீது வழக்குப் பதியப்பட்டன.இதற்கு அடுத்தப்படியாக, ஆட்டோவில் அதிகளவில் மாணவா்களை ஏற்றி வந்ததாக 242 வழக்குகள், இரு சக்கர வாகனங்களில் 3 போ் பயணித்ததாக 78 வழக்குகள் என வழக்குகள் பதியப்பட்டன. இனி இதுபோன்ற சோதனை அடிக்கடி நடத்தப்படும் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com