வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால், விலையில் சரிவு ஏற்பட்டு உள்ளது.
தக்காளி
தக்காளி

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால், விலையில் சரிவு ஏற்பட்டு உள்ளது.  சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று காலை 60 வாகனங்களில் சுமார் 900 டன் தக்காளி வந்துள்ளது. இதனால், ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.30-க்கும், பெங்களூரூ தக்காளி ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதுபோல மற்ற காய்கறிகள் பீன்ஸ், அவரைக்காய் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

மழை, புயல் உள்ளிட்ட காரணங்களால் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.110 ரூபாய்க்கு விற்பனையானது.

தக்காளி விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள், இல்லதரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com