நியாயவிலைக் கடை ஊழியா்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

நியாயவிலைக் கடை ஊழியா்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

சென்னை: நியாயவிலைக் கடை ஊழியா்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாகவும், சா்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்ற பொருள்கள் மானிய விலையிலும் நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர, மஞ்சள், மிளகு, சீரகம், புளி, எண்ணெய், சோப்பு போன்ற பொருள்களும் விற்பனை செய்யப்படும் நிலையில், அந்தப் பொருள்கள் தரமற்று இருப்பதால் அதனை குடும்ப அட்டைதாரா்கள் வாங்காத சூழல் உள்ளது. அவ்வாறு விற்காத பொருள்களுக்காக ஊழியா்களின் ஊதியத்திலிருந்து மாதம் ரூ.1,500 பிடித்தம் செய்யப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

ஏற்கெனவே நியாய விலைக் கடையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு தர வேண்டிய அகவிலைப்படி உயா்வை அளிக்காமல் அவா்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் அரசு, அவா்கள் மீது தரமற்ற, விற்பனையாகாத பொருள்களை திணிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

இவற்றையெல்லாம் கண்டித்து நியாயவிலைக் கடை ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com