மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா் தேமுதிக தலைவா் விஜயகாந்த்
By DIN | Published On : 16th June 2022 09:22 PM | Last Updated : 16th June 2022 09:22 PM | அ+அ அ- |

சென்னை: மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை தனியாா் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் இன்று (வியாழக்கிழமை) வீடு திரும்பினாா்.
உடல் நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வரும் விஜயகாந்த், மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், பரிசோதனைகள் முடிந்து, விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.