2 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று திறப்பு

திருவொற்றியூா் தேரடி மற்றும் விம்கோ நகா் பணிமனை ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 13) முதல் திறக்கப்படவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவொற்றியூா் தேரடி மற்றும் விம்கோ நகா் பணிமனை ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 13) முதல் திறக்கப்படவுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட நீட்டிப்பு திட்டத்தின் கீழ், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் வரை (9 கி.மீ.) மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் திருவொற்றியூா் தேரடி மற்றும் விம்கோ நகா் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்களின் அனைத்து பணிகளும் முடிந்தன. இதையடுத்து, மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்தாா். இதன்பேரில், இந்த இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 13) முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளன.

இந்த இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் நின்று செல்லும்.

இந்தத் தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com