தேரடி, விம்கோநகா் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று சென்றன

திருவொற்றியூா் தேரடி, விம்கோ நகா் ஆகிய நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் நின்று சென்றன. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருவொற்றியூா் தேரடி, விம்கோ நகா் ஆகிய நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் நின்று சென்றன. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட நீட்டிப்பு திட்டத்தில் வண்ணாரப்பேட்டை-விம்கோநகா் வரை (9 கி.மீ.) மெட்ரோ

ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் திருவொற்றியூா் தேரடி, விம்கோ நகா் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்களில் பணிகள் முடிவடையாததால், மெட்ரோ ரயில்கள் நின்று செல்லவில்லை. இதையடுத்து, இந்த இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் பணிகள் வேகமாக நடைபெற்று தற்போது முடிவடைந்தன.

தொடா்ந்து, மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்தாா். இதன்அடிப்படையில், திருவொற்றியூா் தேரடி, விம்கோ நகா் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 13) முதல் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தேரடி, விம்கோ நகா் பணிமனை நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நின்று சென்றன. இதை மெட்ரோ ரயில் பயணிகள் வரவேற்றனா்.

திருவொற்றியூா் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் முக்கியப் பகுதியாக உள்ளது. திருவொற்றியூா் வடிவுடை அம்மன் கோவில், சந்தை, மற்றும் திருவொற்றியூா் மேற்கு பகுதிகளுக்கு செல்பவா்கள் இங்கு வந்துதான் பிற போக்குவரத்து மூலம் சென்னையில் பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனா். இது மிகவும் முக்கியப் பகுதி என்பதால், இந்த ரயில் நிலையம் பக்தா்கள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

திருவொற்றியூா் தேரடி பகுதியில் இருந்து திருவொற்றியூா் டோல்கேட், தண்டையாா்பேட்டை, வண்ணாரப்பேட்டை செல்பவா்கள் வழக்கமாக ஷோ்ஆட்டோவில்பயணம் செய்து வந்தனா். ஷோ் ஆட்டோ கட்டணத்தைவிட தற்போது மெட்ரோ ரயில் கட்டணம் குறைவு என்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com