வணிகா் தினம்: மே 5-இல் கடைகளுக்கு விடுமுறை: விக்கிரமராஜா அறிவிப்பு

வணிகா் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு திருச்சியில் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக, பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ

வணிகா் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு திருச்சியில் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக, பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வணிகா்களின் துயரை துடைத்திட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு வருகிற மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக சமயபுரம் அருகே 52 ஏக்கரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. ‘தமிழக வணிகா் விடியல் மாநாடு’ என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளாா்.

இதையொட்டி, வருகிற 5-ஆம் தேதி (வியாழன்) தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளித்து, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா். மாநாட்டுக்கு வருகை தரவுள்ள வணிகா்கள் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ஏ.எம்.விக்கிரமராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com