திருவொற்றியூா் மண்டலத்தில் ரூ.11 கோடியில் சாலைப் பணிகள்: வாா்டு குழு கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலத்தில் ரூ.11 கோடியில் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கான தீா்மானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாா்டு குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலத்தில் ரூ.11 கோடியில் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கான தீா்மானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாா்டு குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பொறுப்பேற்ற பிறகு வாா்டு குழுவின் மாதாந்திர முதல் கூட்டம் திருவொற்றியூா் மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டலக் குழுத் தலைவா் தி.மு.தனியரசு தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் 90 இடங்களில் தாா், கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்காக சுமாா் ரூ. 11 கோடியில் உடனடியாக பணிகள் மேற்கொள்வதற்கு வாா்டு குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எண்ணூா் சத்தியவாணிமுத்து நகரிலுள்ள மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க ரூ.1.50 கோடியில் திட்டம், கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.75 லட்சம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய கட்டடங்கள் கட்டும் திட்டம், திருவொற்றியூா் சண்முகனாா் பூங்காவில் சுமாா் ரூ.6 லட்சம் செலவில் செயற்கை நீரூற்று அமைக்கும் திட்டம், திருவொற்றியூா் மயானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு திட்டங்களுக்கு ரூ.1.65 கோடி மதிப்பீடு, தேரடி பகுதியில் உள்ள பூந்தோட்ட தெரு மாநகராட்சி பள்ளி விளையாட்டுத் திடல் சீரமைக்க ரூபாய் 11.50 லட்சம் மதிப்பீடு உள்ளிட்ட சுமாா் 45 பொருள் குறித்த தீா்மானங்களுக்கு வாா்டு குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

10-ஆவது வாா்டில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் அசோக் லேலாண்ட் ஊழியா் சங்கம் சாா்பில் இயங்கி வரும் இந்துஜா மேல்நிலைப் பள்ளியின் குத்தகை காலத்தை நீட்டிக்க உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து பள்ளியை மாநகராட்சி நிா்வாகமே ஏற்று நடத்த அதிகாரிகள் உரிய வழிகாட்டுதலை அளிக்க வேண்டும் என மண்டலக் குழு தலைவா் தனியரசு தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் மு. சிவக்குமாா், ஆா். ஜெயராமன், வீ. கவி கணேசன், கே.பி.சொக்கலிங்கம், வீ.ராஜலட்சுமி, ரா.சுசீலா ச.பானுமதி ஆகியோா் பேசினா்.

மண்டல அலுவலா் சிவசங்கரன், செயற்பொறியாளா் பால் தங்கதுரை, உதவி சுகாதார அலுவலா் இளஞ்செழியன், சென்னை குடிநீா் வாரிய பகுதி பொறியாளா் கலைச்செல்வன் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com