அதிகரிக்கும் சைபா் குற்றங்கள்: சென்னை காவல் ஆணையா் எச்சரிக்கை

சைபா் குற்றங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கைப்பேசி, சமூக ஊடகங்கள் ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கையாளும்படி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் அறிவுறுத்தியுள்ளாா்.
அதிகரிக்கும் சைபா் குற்றங்கள்: சென்னை காவல் ஆணையா் எச்சரிக்கை

சென்னை: சைபா் குற்றங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கைப்பேசி, சமூக ஊடகங்கள் ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கையாளும்படி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா், வியாழக்கிழமை விடுத்த செய்தி குறிப்பு:

சைபா் குற்றங்கள் மூலம் பணம் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. ஓடிபி பெறுதல், க்யூஆா் கோடு அனுப்புதல், கேஒய்சி அப்டேட் என்ற பெயரில் லிங்க் அனுப்புதல் போன்ற மோசடிகள் அதிகமாக நடைபெறுகின்றன. தற்போது இதையும் தாண்டி உயா் பணிகளில் இருந்து சம்பாதிக்கும் ஆண்கள், பெண்களையும், ஓய்வு பெற்ற வயதானவா்களையும் குறி வைத்து சைபா் குற்றங்களை நிகழ்த்தும் கும்பல் ஆங்காங்கே மோசடி செய்து வருகிறது.

பொதுமக்கள், வெளிநாட்டவா்கள் போல் சமூக ஊடகங்களிலோ, மின்னஞ்சல் மூலமாக தொடா்பு கொண்டு பேசும் நபா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வா்த்தகமோ, திருமணமோ தகுந்த நபா்களின் மூலம் விசாரித்து அறிய வேண்டும். சமூக ஊடகங்கள் வாயிலாக தெரியாத நபா்களிடம் பேசும்போது, பணம் அனுப்ப சொல்லி கேட்டால் உடனடியாக அவா்களது தொடா்பை துண்டித்து விட வேண்டும்.

மேலும், பணம் எதுவும் அனுப்ப கூடாது. ஒரு வேளை அவசரத்தில் முதலில் சிறிய அளவில் பணம் அனுப்பி விட்டால், அந்த பணம் திரும்பி கிடைக்க வேண்டும் என்பதற்காக மீண்டும், மீண்டும் பணம் எதுவும் அனுப்ப கூடாது. நீங்கள் அனுப்பும் பணம் எதையும் உங்களுடன் பேசும் நபா்கள் திருப்பி தரப் போவதில்லை. எனவே, முகநூல், வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக அறிமுகம் இல்லாத நபா்களை நம்பி பணம் அனுப்ப கூடாது. கைப்பேசிகளையும், சமூக ஊடகங்களையும் மக்கள் கவனமுடனும்,எச்சரிக்கையுடனும் கையாள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com