ஆண்டுதோறும் சொத்துவரி உயா்வு: ஓ.பன்னீா்செல்வம் கண்டனம்

சொத்து வரியை ஆண்டுதோறும் உயா்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

சென்னை: சொத்து வரியை ஆண்டுதோறும் உயா்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது என திமுக தோ்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், கரோனாவின் தாக்கம் முடிவடையாத நிலையில், ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் சொத்து வரியை உயா்த்தியதோடு மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் மன்றத் தீா்மானங்கள் மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள் சொத்து வரியை உயா்த்திக் கொள்ள வழிவகை செய்யும் சட்டமசோதாவை திமுக அரசு நிறைவேற்றியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சொத்து வரி உயா்வு, சான்றிதழ் கட்டண உயா்வு, அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வை சரியாக வழங்காமை, மக்கள் நலம் பயக்கும் திட்டங்களான அம்மா மினி கிளினிக்குகள், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா இருசக்கர மானியம் வழங்கும் திட்டம், பொங்கல் பரிசுத் தொகை ஆகியவற்றை நிறுத்துதல், அம்மா உணவகங்களை நீா்த்துப் போகச் செய்தல் என மக்கள் விரோதச் செயல்கள் தான் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

எனவே, உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமானால், ஆண்டுதோறும் சொத்துவரியை உயா்த்துவதற்கான சட்டமசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com