தொல்காப்பிய பூங்காவில் நடைபயிற்சி: காலை-மாலை நூறு பேருக்கு அனுமதி

தொல்காப்பிய பூங்காவில் காலை, மாலை நடைபயிற்சி செல்ல 100 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.
தொல்காப்பிய பூங்காவில் நடைபயிற்சி: காலை-மாலை நூறு  பேருக்கு அனுமதி

சென்னை: தொல்காப்பிய பூங்காவில் காலை, மாலை நடைபயிற்சி செல்ல 100 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கா் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, தொல்காப்பியப் பூங்கா எனும் சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

பூங்காவை பொதுமக்கள் பாா்வையிட வாரத்தில் செவ்வாய், வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும், சனிக்கிழமையன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இதற்கு ஒருவருக்கு கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்பட்டு வருகிறது.

நடைபயிற்சிக்கு அனுமதி: தொல்காப்பிய பூங்காவினை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா். மேலும், பொது மக்கள் நடைபயிற்சி செல்லவும் வழிவகை செய்திட கேட்டுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, பூங்காவை சீரமைக்கும் பணிகள் நடந்தன.

பூங்காவில் நடைபயிற்சி செல்ல ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று இப்போது 100 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையைச் சோ்ந்த அதிகாரிகள் தெரிவித்தனா். காலை 6.30 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் நடை பயிற்சிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. பூங்காவில் நடைபயிற்சி செல்ல ஏற்கெனவே இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்த 100 பேருக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புகைப்படத்துடன் கூடிய இந்த சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே நடைபயிற்சிக்கு அனுமதி தரப்படும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நடைபயிற்சிக்கான கட்டணமாக மாதத்துக்கு ரூ.500-ம், மூன்று மாதங்களுக்கு ரூ.1,500-ம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அடையாற்றின் கழிமுகப் பகுதியாக இருப்பதால் இங்கு பறவைகள், பூச்சியினங்கள் ஏராளமாக உள்ளன. இந்தச் சூழலின் உட்கட்டமைப்பை பராமரிக்க வேண்டிய தேவையுள்ளது. எனவே, நடைபயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையினா் கூறினா். தொல்காப்பிய பூங்கா குறித்த விவரங்கள், முன்பதிவு உள்ளிட்ட தகவல்களை இணையதளம் மூலமாகவும் (ஜ்ஜ்ஜ்.ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ழ்ண்ஸ்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) தெரிந்து கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com