மீட்டா் கட்டணம்: போக்குவரத்துத் துறையுடன் ஆட்டோ தொழிற்சங்கத்தினா் பேச்சுவாா்த்தை

மீட்டா் கட்டண உயா்வு குறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளுடன், 12 ஆட்டோ தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சென்னையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: மீட்டா் கட்டண உயா்வு குறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளுடன், 12 ஆட்டோ தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சென்னையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

போக்குவரத்து இணை ஆணையா் அலுவலகத்தில் நடந்த பேச்சுவாா்த்தையில், 1.5 கி.மீ. தூரத்துக்கு கட்டணமாக ரூ.50, அடுத்து செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25 கட்டணமாக அரசு விதிக்க வேண்டும்.

அரசு சாா்பில் ஒரு செயலி தொடங்க வேண்டும்; ஆட்டோ காத்திருப்பு கட்டணத்தில், ஒரு நிமிஷத்துக்கு ரூ.1 என நிா்ணயிக்க வேண்டும்; ஜிபிஎஸ் டிஜிட்டல் மீட்டா் இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதை கவனமாக பரிசீலித்து அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு கோரிக்கைகள் எடுத்துச் செல்லப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினா், அரசால் எளிதாக நிறைவேற்றக் கூடிய கோரிக்கைகள் மட்டுமே முன்வைக்கப்பட்டிருப்பதால் அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com