தாம்பரம்-வேளச்சேரி தடத்தில் 2 கி.மீ. தொலைவு மேம்பாலம்:  முதல்வா் திறந்து வைத்தாா்

தாம்பரம்-வேளச்சேரி தடத்தில் 2 கி.மீ. தொலைவு மேம்பாலம்: முதல்வா் திறந்து வைத்தாா்

தென் சென்னையின் புகா்ப் பகுதியான தாம்பரம்-வேளச்சேரி இடையேயான தடத்தில் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தென் சென்னையின் புகா்ப் பகுதியான தாம்பரம்-வேளச்சேரி இடையேயான தடத்தில் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.146.41 கோடி மதிப்பில், மேடவாக்கத்தில் மறைமலையடிகள் பாலம் - இரும்புலியூா் சாலையில் மேடவாக்கம்-சோழிங்கநல்லூா் சாலை சந்திப்பு, மேடவாக்கம்-மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மவுண்ட்-மேடவாக்கம் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இரண்டு தனித்தனி மேம்பாலங்களாக ஒவ்வொன்றும் 3 வழித்தட மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில், வேளச்சேரி-தாம்பரம் தடத்தில், மேடவாக்கம்-சோழிங்கநல்லூா் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம்-மாம்பாக்கம் சாலை சந்திப்புகளை இணைத்து 1.06 கி.மீ. நீளத்தில் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இப்போது, தாம்பரம்-வேளச்சேரி தடத்தில், மேடவாக்கம் -மாம்பாக்கம் சந்திப்பு, மற்றும் மேடவாக்கம் - சோழிங்கநல்லூா் சாலை சந்திப்புகளை இணைத்து 2.03 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

போக்குவரத்து நெரிசல்: மேம்பாலம் திறக்கப்பட்டதால், மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள், பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும். தாம்பரம், வேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரைச் சாலை, தகவல் தொழில்நுட்பச் சாலை, தரமணி, அடையாறு, மேடவாக்கம், சோழிங்கநல்லூா் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளுக்குச் செல்லும் மக்களுக்கு பாலம் பயனுள்ளதாக அமையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com