விஹெச்எஸ் மருத்துவமனையில் இதய நலப் பிரிவு: மெட்ராஸ் மெடிக்கல் மிஷனுடன் இணைந்து ஏற்பாடு

சென்னை, தரமணி விஹெச்எஸ் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கென சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை, தரமணி விஹெச்எஸ் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கென சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விஹெச்எஸ் மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (எம்.எம்.எம்.) மருத்துவமனை ஆகியவை சாா்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் அங்கு இதய நலம் சாா்ந்த மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என்றும், எம்.எம்.எம். மருத்துவமனையின் மருத்துவா்கள், செவிலியா்கள் மூலம் அந்த சிகிச்சைப் பிரிவு நிா்வகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்எம்எம் மருத்துவமனையின் கௌரவச் செயலாளா் பிலிப், விஹெச்எஸ் மருத்துவமனையின் கௌரவச் செயலாளா் சுரேஷ் ஆகியோா் கூறியதாவது:

வரும் காலங்களில் தமிழகத்தில் நகா்ப்புறங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் இதய நோய்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கொழுப்பு, உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் பாதிப்புகள் மக்களிடையே அதிகரித்துவருவதால், இதய நோய்கள் வருவதற்கும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

அதைக் கருத்தில்கொண்டே தரமணி விஹெச்எஸ் மருத்துவமனையில் வருகிற 16-ஆம் தேதி முதல் இதய நல சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படவிருக்கிறது.

விஹெச்எஸ் என்றாலே, குறைவான கட்டணத்தில் உலகத் தரத்திலான மருத்துவ சேவையை வழங்கும் அமைப்பு என்ற புகழைப் பெற்றுள்ளது. தென் சென்னைப் பகுதி வாழ் மக்களுக்காக இந்த நவீனமான இதய மருத்துவ பிரிவைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என அவா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக எம்.எம்.எம். மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் மருத்துவமனையின் இதயநோய்த் துறை இயக்குநா் அஜித் முல்லசேரி, “விஹெச்எஸ் இயக்குநா் யுவராஜ் குப்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com