முதல்வா் பங்கேற்கவிருந்த சேலம் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

சேலம், ஆத்தூரில் வரும் 18-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த திமுக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சேலம், ஆத்தூரில் வரும் 18-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த திமுக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:

தமிழக மக்களின் பேராதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. ‘ஓயாத உழைப்பின் ஓராண்டு’ எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் ஆட்சியின் சாதனைகளை விளக்கிப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஓராண்டுக்கு முன்பு, தோ்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடுமையாக இருந்ததால் நன்றி அறிவிப்புக் கூட்டங்களையோ, வெற்றி விழா மாநாட்டினையோ நடத்திட இயலவில்லை.

இந்த நிலையில், தற்போது ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் பேராதரவுடனும் பங்கேற்புடனும் நடந்து வருவது குறித்த தகவல்கள் உங்களில் ஒருவனான எனக்கு உற்சாகம் தருவதுடன், மேலும் உழைத்திட ஊக்கம் அளிக்கிறது.

வரும் 18-ஆம் தேதி, சேலம் மாவட்டம் ஆத்தூா் பொதுக்கூட்டத்தில் உங்களை (தொண்டா்கள்) நேரில் காணலாம் என்ற பேராவல் கொண்டிருந்தேன். திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, அதற்கான முன்னேற்பாடுகளை முனைப்புடன் மேற்கொண்டாா். பருவநிலையை சுட்டிக்காட்டி, வானிலை ஆய்வு மையத்தினா் அன்றைய நாளில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி, ஆத்தூா் பொதுக்கூட்டத்திற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் விரைவில் பங்கேற்கவிருக்கிறேன். அதனைத் தொடா்ந்து, கழகத்தின் சாா்பிலான நிகழ்வுகளிலும் உங்கள் முகம் காண ஆவலுடன் இருக்கிறேன் என்று அந்த கடிதத்தில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com