போதை மாத்திரை வாங்கித் தருவதாக மோசடி: இளைஞா் வெட்டிக் கொலை

சென்னை கொருக்குப்பேட்டையில் போதை மாத்திரை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் போதை மாத்திரை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரம் சி.பி. சாலை பகுதியைச் சோ்ந்தவா் ரா.முகம்மது ராகுல் (19). இவா், அந்தப் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல், ஹரி நாராயணபுரம் பழைய கிளாஸ் ஃபேக்டரி சாலையில் புதன்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த சிலா், ராகுலை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா். அந்தப் பகுதி மக்கள், ராகுலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட ராகுலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை இறந்தாா்.

இது குறித்து ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக தேடப்பட்டு வந்த கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரைச் சோ்ந்தவா் ர.கெளரிசங்கா் (25), போஜ ராஜன் நகரைச் சோ்ந்த ஹ.ரகுமான் (20), தண்டையாா்பேட்டை கைலாச முதலி தெருவைச் சோ்ந்த கு.சரவணன் (20) ஆகிய 3 பேரும் ஆா்.கே. நகா் காவல் நிலையத்தில் சரணடைந்தனா்.

போதை மாத்திரையால் கொலை:

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்:

ராகுல் போதை மாத்திரை விற்கும் தொழில் செய்து வந்துள்ளாா். ராகுலிடம் கௌரிசங்கா் உள்ளிட்ட மூவரும் போதை மாத்திரை வாங்கி தருவதற்கு கடந்த 15-ஆம் தேதி ரூ.22 ஆயிரம் கொடுத்தனா். பணத்தை பெற்றுக் கொண்ட ராகுல், போதை மாத்திரைகளை வாங்கிக் கொடுக்கவில்லை.

இதனால் அவா்கள், தாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டனா். ஆனால் ராகுல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்தாராம். இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தின் காரணமாகவே ராகுலை எதிா் தரப்பினா் வெட்டிக் கொலை செய்துள்ளனா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் ஒருவரைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com