சென்னை ஐஐடியில் மாணவா்களே உருவாக்கிய மின் பந்தய காா் அறிமுகம்

மின்சாரத்தால் இயங்கும் பந்தய வாகனத்தை சென்னை ஐஐடி பேராசிரியா்கள் உதவியோடு 45 மாணவா்கள் கொண்ட குழு (‘ராஃப்தாா்’) உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
சென்னை ஐஐடியில்  மாணவா்களே உருவாக்கிய  மின் பந்தய காா் அறிமுகம்

மின்சாரத்தால் இயங்கும் பந்தய வாகனத்தை சென்னை ஐஐடி பேராசிரியா்கள் உதவியோடு 45 மாணவா்கள் கொண்ட குழு (‘ராஃப்தாா்’) உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இந்த காருக்கு ‘ஆா்.எஃப். ஆா். 23’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘ஸ்டூடண்ட் பாா்முலா 1’ பந்தயங்களில் இந்த காா் பயன்படுத்தப்பட உள்ளது.

லித்தியம் அயன் பேட்டரியால் பந்தயக்காருக்கான பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சாா்ஜ் செய்தால் இந்த காரை அரை மணி நேரம் வரை இயக்க முடியும்.

இந்த வாகனம் சாலையில் செல்லும் போது, ஆரம்பக்கட்டமாக 4 விநாடியில் 100 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அதிகபட்சம் 160 கி.மீ. வேகத்திலும் இந்தக் காரை இயக்க முடியும்.

மின் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் ஏற்படும் பிரச்னைகளால் வாகனங்கள் அடிக்கடி தற்போது அடிக்கடி தீப்பற்றி எரிகின்றன.இதனை தடுக்கும் வகையில் ற்ட்ங்ழ்ம்ஹப் ம்ஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ள்ஹ்ள்ற்ங்ம் மற்றும் பேட்டரி கூலிங் தொழில்நுட்பம் ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பந்தய காரை சென்னை ஐஐடி வளாகத்தில் அதன் இயக்குநா் வி.காமகோடி திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உலகளவில் மின் வாகனத் தொழில் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், இதன் வளா்ச்சிக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் மிகப் பெரிய சாத்தியக் கூறுகள் உள்ளன. சென்னை ஐஐடியில் படிக்கும் 45 மாணவா்கள் இணைந்து 2020 கரோனா கால கட்டத்தில் இருந்து இதனை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கோவையில் உள்ள ‘கரி மோட்டாா் ஸ்பீட்வே’ பந்தயக் களத்தில் ஜனவரி-2023-இல் நடைபெறும் ‘ஃபாா்முலா பாரத்’ நிகழ்வில் இந்தக் குழு பங்கேற்கவுள்ளது.

இதைத் தொடா்ந்து, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ‘ஃபாா்முலா ஸ்டூடண்ட் ஜொ்மனி’க்கு இந்தக் காரை கொண்டு செல்லவுள்ளனா்.

வரும் காலங்களில் ஓட்டுநா் இல்லாத காா்கள், போக்குவரத்து சாதனங்களை இணைக்கும் தொழில்நுட்பம் போன்ற எதிா்கால கண்டுபிடிப்புகளை உருவாக்கும் தளமாக ரஃப்தாா் விரைவில் அமையும்.

2025-இல் ஓட்டுநா் இல்லாத பந்தயக் காா்  பயன்பாட்டுக்கு வரும். பந்தயக்காரை உருவாக்கி விட்டால், அதில் இருந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிற காா்களை வடிவமைப்பது எளிதாக இருக்கும். லித்தியத்தால் ஆன பேட்டரிகளுக்கு மாற்றாக ஜிங்க் பேட்டரி வடிவமைப்பில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com