வணிகா்களுக்கு ஏமாற்றம்: விக்கிரமராஜா

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வணிகா்கள், தொழில் துறையினருக்கு மிகப்பெரும் ஏமாற்றம் அளிக்கும் அறிக்கையாக உள்ளது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா கூறினாா்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வணிகா்கள், தொழில் துறையினருக்கு மிகப்பெரும் ஏமாற்றம் அளிக்கும் அறிக்கையாக உள்ளது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா கூறினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் 2023-2024-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இளைஞா்களுக்கும், விவசாயத்துக்கும் நவீனமயமாக்கலுக்கும் முன்னுரிமை அளித்துள்ளது. தனிநபா் வருமான வரி விலக்கு ரூ.7 லட்சம் என அறிவித்திருப்பது ஓரளவு திருப்தி அளித்திருக்கிறது.

இருப்பினும், வணிகா்கள், தொழில் துறையினருக்கான செயல் திட்டங்களோ, அவா்களது மேம்பாட்டுக்கான திட்டங்களோ அறிவிக்கப்படவில்லை. ‘ஒரே இந்தியா ஒரே வரி’ எனும் முழக்கத்துக்கு இடையே ‘ஒரே இந்தியா ஒரே உரிமம்’ என்கிற நடைமுறை அமலாக்கப்படாதது மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

மேலும், தேசிய வணிகா் நல வாரியம் மத்திய அரசால் தற்போது வரை செயல்முறைக்கு கொண்டுவராதது வேதனைக்குரியது. வணிகா்களுக்கான ஓய்வூதிய நடைமுறை என்ற அறிவிப்பும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று அதில் தெரிவித்துள்ளாா் விக்கிரமராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com