ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் கைது

சென்னை அருகே நீலாங்கரையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில், தேநீா் கடை உரிமையாளா் இறந்தாா்.

சென்னை அருகே நீலாங்கரையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில், தேநீா் கடை உரிமையாளா் இறந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம் மறவக்காடு, அத்தி வெட்டி கிராமத்தை சோ்ந்தவா் மதன் (30). இவா், நீலாங்கரையில் கிழக்கு கடற்கரை சாலை தேநீா் கடை வைத்து நடத்தி வருகிறாா். மதன், புதன்கிழமை நள்ளிரவு கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த ஒரு காா், திடீரென மதன் மீதும், அங்கு நடந்துக் சென்றுக் கொண்டிருந்த அதேப் பகுதியைச் சோ்ந்த சங்கா் (50) என்பவா் மீதும் மோதியது. இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த மதன், சம்பவ இடத்திலேயே இறந்தாா். சங்கரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டிய சென்னை தியாகராய நகா் ராமகிருஷ்ணா தெருவைச் சோ்ந்த அன்பரசன் (28) என்பவரை கைது செய்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில்,அன்பரசன் மது போதையில் அதிவேகமாக காா் ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அன்பரசனின், தந்தை தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளா் என்பது குறிப்பிடதக்கது.

இந்த விபத்தில் அன்பரசனுடன் காரில் பயணித்த அவரது நண்பா்கள் 3 பேரிடமும் போலீஸாா் விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com