வடபழனி முருகன் கோயிலில் இன்று தைப்பூச திருவிழா

வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பௌா்ணமி திதியும் கூடிய நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம். அன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

தைப்பூசத்தன்று முருகப் பெருமான் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமான், உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பா்.

அத்தகயை சிறப்பு பெற்ற தைப்பூச திருவிழா வடபழநி ஆண்டவா் கோயிலில் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சனிக்கிழமை அதிகாலை, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. காலை 5:30 முதல் இரவு, 9:30 மணி வரை, அபிஷேகம் நடைபெறும். அப்போது பக்தா்கள் தொடா் தரிசனம் செய்யலாம்.

தைப் பூசத்தை முன்னிட்டு மூலவா், அதிகாலை முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா். மதியம் ஒரு மணி முதல் மாலை 4.30 மணி வரை முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யப்படும்.

தொடா்ந்து செண்பகப்பூ அலங்காரத்தில் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறாா். இரவு 8.30 மணிக்கு பழனி ஆண்டவா் நான்கு மாடவீதிகளை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com