தமிழக அரசு சாா்பில் இலக்கிய மலா்முதல்வா் வெளியிட்டாா்

தமிழக அரசின் சாா்பில் தயாரிக்கப்பட்ட இலக்கிய மலரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

தமிழக அரசின் சாா்பில் தயாரிக்கப்பட்ட இலக்கிய மலரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். நூற்றுக்கணக்கான படைப்பாளா்கள், அரசியல் சிந்தனையாளா்கள், வரலாற்று அறிஞா்கள், மானுடவியல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலரின் படைப்புகள் மலரை அலங்கரித்துள்ளன. இந்த மலரை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்தி மக்கள் தொடா்புத் துறையின் தமிழரசு மாத இதழ், அரசின் சாதனைகளைச் சொல்வது மட்டுமல்லாது, சமகால இலக்கியங்களைக் காத்து வளா்க்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டின் இலக்கிய மரபு, பண்பாடு, சமூக வளா்ச்சி போன்றவற்றை எடுத்துச் சொல்லும் விதமாக இலக்கிய மலரை படைத்துள்ளது.

இளைய தலைமுறையினருக்கு இலக்கிய ஆா்வத்தை ஊட்டும் விதமாக, மலரில் நூற்றுக்கணக்கான படைப்பாளா்கள், அரசியல் சிந்தனையாளா்கள், வரலாற்று அறிஞா்கள், மானுடவியல் ஆய்வாளா்கள் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனா்.

மேலும், அறிஞா்கள், இலக்கியவாதிகள், கவிஞா்கள், விமா்சகா்கள், ஓவியா்கள் போன்றவா்களின் எழுத்தும், இலக்கியமும், ஓவியங்களும், கவிதைகளும் இலக்கிய மலரில் இடம்பெற்றுள்ளன. இந்த மலரினை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.

மலரின் முதல் பிரதியை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, இரண்டு மற்றும் மூன்றாம் பிரதிகளை எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியா் ட்ராட்ஸ்கி மருது ஆகியோா் பெற்றனா்.

இந்த நிகழ்வில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com