மாநகராட்சி மருத்துவனைக்கு ரூ.7 லட்சம் மகப்பேறு உபகரணங்கள்

திருவொற்றியூரில் உள்ள சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான மகப்பேறு சிகிச்சைக்கான உபகரணங்களை எம்.ஆா்.எப். நிறுவனம் வழங்கியது.

திருவொற்றியூரில் உள்ள சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான மகப்பேறு சிகிச்சைக்கான உபகரணங்களை எம்.ஆா்.எப். நிறுவனம் வழங்கியது.

திருவொற்றியூா் எல்லை அம்மன் கோயில் அருகே உள்ள இம்மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அல்ட்ரா சவுண்ட், இசிஜி, கருவில் உள்ள குழந்தைகளின் இதயத்துடிப்பை அறிந்து கொள்ள உதவும் காா்டியோ டோகோகிராபி, அறுவை சிகிச்சை அரங்குகளில் இருக்கும் நச்சு கிருமிகளை ஒழிக்க உதவும் மருந்து தெளிப்பான்கள், அலமாரிகள், நாற்காலிகள் உள்ளிட்ட ரூ.7லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.சங்கரிடம், எம்.ஆா்.எப். நிறுவனத்தின் பொது மேலாளா் சாக்கோ ஜேக்கப் வழங்கினாா்.

பின்னா் அவை மாநகராட்சி உதவி மருத்துவ அதிகாரி டாக்டா் மாலதியிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் செயல்பட்டுவரும் சுனாமி மறுவாழ்வு அரசு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் செய்து தருவதாகவும், எம்.ஆா்.எப்.நிறுவனத்தின் அதிகாரிகள் உறுதியளித்தனா்.

நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவா் தி.மு.தனியரசு, எம்.ஆா்.எப். நிறுவன அதிகாரிகள் சந்தா், சம்பத்குமாா், மக்கள் தொடா்பு அதிகாரி நந்தகுமாா், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் வி.ராமநாதன், வட்டச் செயலாளா் மு.கலைவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com