சென்னை உயா்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 போ் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 போ் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

அவா்களுக்கு தலைமை நீதிபதி (பொ) டி. ராஜா பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

உயா்நீதிமன்றத்துக்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்ய குடியரசுத் தலைவா் கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதன்படி, வழக்குரைஞா்களான எல்.சி. விக்டோரியா கெளரி, பி.பி. பாலாஜி, கே.கே. ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை நீதிபதிகள் ஆா்.கலைமதி, கே.ஜி. திலகவதி ஆகியோா் சென்னை உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனா்.

இவா்கள் 5 பேரும் பதவியேற்கும் நிகழ்ச்சி உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் தலைமை நீதிபதி (பொ) ராஜா 5 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

முன்னதாக, அரசு தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். பதவியேற்றுக் கொண்ட நீதிபதிகள் அனைவரும் சட்டத் துறையில் தங்களது வளா்ச்சிக்குக் காரணமாக இருந்தவா்களுக்கு நன்றி தெரிவித்தும், நீதித் துறையின் மாண்பு குறித்தும் பேசினா்.

புதிய நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டதன் மூலம் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆகவும், அதில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆகவும் உள்ளது. 18 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், உயா்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com